தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி : இறுதிப் போட்டியில் வருமான வரித்துறை - இந்தியன் வங்கி அணிகள் இன்று பலப்பரீட்சை

கோவை : தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வருமான வரித்துறை அணி மற்றும் இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.

கோவை : தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வருமான வரித்துறை அணி மற்றும் இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன. 



கோவையில் 54-வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை, 18-வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த 27-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் 54வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பைக்கான ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், வருமான வரித்துறை அணியும், இந்திய விமானப்படை அணியும் மோதின. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் முதல் காலிறுதி ஆட்டத்தில் சரிசமமான புள்ளிகளைப் பெற்று வந்தன. தொடர்ந்து, 2-வது காலிறுதியில் இந்திய விமானப்படை அணி கோட்டை விட்டது. இதனால், வருமான வரித்துறை அணி முன்னிலை பெற்றது. 



இந்த முன்னிலையை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வருமான வரித்துறை அணி, 68-64 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.



இதேபோல, மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியன் வங்கி அணி 77-60 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ராணுவ அணியை தோற்கடித்து 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில், வருமான வரித்துறை அணியும், இந்தியன் வங்கி அணியும் மோதுகின்றன.

Newsletter