தென்னிந்திய அளவிலான மகளிர் வாலிபால் போட்டியில் பி.கே.ஆர். கல்லூரி அணி சாம்பியன்

கோவை : தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டியில் பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


கோவை : தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டியில் பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 



சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய அளவிலான மகளிர் வாலிபால் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 



கோவை மாநகராட்சியின் மைதானத்தில் கடந்த மே 27-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த 6 அணிகள் பங்கேற்றன. பல்வேறு லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோபிச்செட்டி பாளையம்), எஸ்.ஆர்.எம். (சென்னை) அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 



நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், 3-1 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம். அணியை தோற்கடித்து பி.கே.ஆர். அணி கோப்பையை வென்று அசத்தியது. 



இதேபோல, 3-வது இடத்திற்கான போட்டியில் கேரளாவைச் சேர்ந்த செயிண்ட் மேரீஸ் கல்லூரி அணி 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஜி.கே.எம். வாலிபால் அறக்கட்டளை அணியை (சென்னை) தோற்கடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை மாவட்ட சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கோப்பைகளையும், ரொக்கப்பரிசையும் வழங்கினார். 

Newsletter