தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி : இந்திய ரயில்வே அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோவை : தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் வருமான வரித்துறை அணியை தோற்கடித்த இந்திய ரயில்வே அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

கோவை : தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் வருமான வரித்துறை அணியை தோற்கடித்த இந்திய ரயில்வே அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 



கோவையில் 54வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை, 18வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த 27-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் 54வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், வருமான வரித்துறை அணியும் இந்திய ரயில்வே அணியும் பலப்பரிட்சை நடத்தின. 



இதில், 79-70 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய ரயில்வே அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய ரயில்வே அணி சார்பில் அதிகபட்சமாக, ராஜன் 24 புள்ளிகளும், விஜய் 18 புள்ளிகளும் பெற்றனர். 



இதேபோல, மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 95-84 என்ற புள்ளி கணக்கில் இந்திய கப்பற்படை அணியை தோற்கடித்தது. 

Newsletter