தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி : இந்திய ரயில்வே அணியை வீழ்த்தியது இந்திய ராணுவ அணி

கோவை : 54-வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவ அணி 83 – 68 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் ரயில்வே அணியை தோற்கடித்தது.

கோவை : 54-வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவ அணி 83 – 68 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் ரயில்வே அணியை தோற்கடித்தது.



கோவையில் 54வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை, 18வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த 27-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் இப்போட்டிகளில், ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன.



நேற்று நடைபெற்ற 54வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவு போட்டியில் இந்தியன் ரயில்வே அணியை எதிர்த்து இந்திய ராணுவ அணி விளையாடியது. இதில், இந்திய ராணுவ அணி 83 – 68 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.



இதேபோல, 18-வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை பெண்கள் பிரிவு முதல் போட்டியில் கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து சென்னை - தென்னக ரயில்வே அணி விளையாடியது. இதில் தென்னக ரயில்வே அணி 80 – 61 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. 



Newsletter