மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி : கோவை நைட்ஸ் மற்றும் இ.ஏ.பி. அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவை : கோவை மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் கோவை நைட்ஸ் மற்றும் இ.ஏ.பி. அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

கோவை : கோவை மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் கோவை நைட்ஸ் மற்றும் இ.ஏ.பி. அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. 



கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மில்ஸ் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நாக்-அவுட் முறையில் நடந்து வரும் இந்தப் போட்டித் தொடரில் மொத்தம் 40 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், கோவை நைட்ஸ் மற்றும் சூர்யபாலா சி.சி. அணிகள் மோதின. 



இதில், முதலில் பேட் செய்த கோவை நைட்ஸ் அணிக்கு, எம். ஷாஜகான் 82 ரன்கள் குவித்ததால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி ஆடிய சூர்யபாலா சி.சி. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் கோவை நைட்ஸ் அணி முன்னேறியது.



இதேபோல, மற்றொரு காலிறுதி போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியை (101/5) இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி (102/3) எளிதில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Newsletter