தென்னிந்திய அளவில் பெண்களுக்கான வாலிபால் போட்டி : பி.கே.ஆர். கல்லூரி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோவை : தென்னிந்திய அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கோவை : தென்னிந்திய அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 



சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய அளவிலான மகளிர் வாலிபால் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. 



கோவை மாநகராட்சியின் மைதானத்தில் நடந்து வரும் இந்தத் தொடரில், கோபிச் செட்டிபாளையத்தைச் சேர்ந்த பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி, ஆந்திர பிரதேச அணியை எதிர்கொண்டு விளையாடியது. ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய பி.கே.ஆர். கல்லூரி அணியின் வீராங்கனைகளை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 



மற்றொரு போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி 3-1 என்ற செட் கணக்கில் ஜி.கே.எம். அணியை வீழ்த்தியது.

Newsletter