மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி : ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் அணி அபார வெற்றி

கோவை : கோவை மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் டெவில் ஸ்டோரக்கர்ஸ் அணி தோற்கடித்தது.

கோவை : கோவை மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் டெவில் ஸ்டோரக்கர்ஸ் அணி தோற்கடித்தது. 



பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் அணி ஜெகதீசன் (40), அபினவ் (40) மற்றும் மனோகரன் (43*) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. 



பின்னர், கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெவில் ஸ்டோரக்கர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 83 ரன்களுக்கு சுருண்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் அணி தரப்பில் அபினவ், ஜாஷ் கே கன்காரியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 



இதேபோல, ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நடந்த மற்றொரு போட்டியில், ராஜசேகர் மணி எம்.சி.சி. அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி ஆடிய சீஹாக்ஸ் சி.சி. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புகளுக்கு 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

Newsletter