ஜெகதீசனின் அபார சதத்தால் ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி அபார வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜெகதசீனின் அபார சதத்தால், ரெயின்போ சி.சி. அணியை 229 ரன்கள் வித்தியாசத்தில் ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி தோற்கடித்தது.

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி பேட் செய்தது. அந்த அணியின் வீரர் என். ஜெகதீசன் அபார சதத்தை விளாசினார். ஜெகதீசன் 113 (112) ரன்களும், சுஜய் 87 ரன்களும் குவித்ததால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை சேர்த்தது. இதைத் தொடர்ந்து, கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ரெயின்போ சி.சி. அணியின் பேட்ஸ்மென்கள் எதிரணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறினர். இதனால், அந்த அணி 17.3 ஓவர்களில் வெறும் 62 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம், 229 ரன்கள் வித்தியாசத்தில் ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பில் கே. கவுதம் தாமரை கண்ணன் 5 விக்கெட்டுகளும், எம். அபினவ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

Newsletter