சி.டி.எஃப்.ஏ. ‘சி. டிவிசன்’ போட்டி : கோப்பையை வென்றது அத்யாயனா எஃப்சி

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சி டிவிசன் போட்டியில் அத்யாயனா எஃப்சி அணி கோப்பையை வென்றது.

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சி டிவிசன் போட்டியில் அத்யாயனா எஃப்சி அணி கோப்பையை வென்றது.

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் ஏ, பி மற்றும் சி பிரிவு கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சி டிவிசன் போட்டிகள் கார்மெல் கார்டன் பள்ளி மைதானத்தில் கடந்த ஏப்.,28-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெற்றது. 8 லீக் போட்டிகளை விளையாடிய அத்யாயனா எஃப்சி கால்பந்து அணி, மொத்தம் 36 கோல்களை அடித்து 22 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிசளிப்பு விழாவில் 18 புள்ளிகள் பெற்ற வாகா கால்பந்து அணிக்கு 2-வது இடத்திற்கான பரிசு வழங்கப்பட்டது. மேலும், அத்யாயனா எஃப்சி கால்பந்து அணியின் வீரர் நந்தகுமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

Newsletter