மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடக்கம்

கோவை : மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி முதன்முறையாக சென்னையில் வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி துவங்க உள்ளது.

கோவை : மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி முதன்முறையாக சென்னையில் வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி துவங்க உள்ளது.

மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கால்பந்து போட்டி, சர்வதேச லயன்ஸ் கிளப் மற்றும் சிறப்பு ஒலிம்பிக் இணைந்து, சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து– 2019 என்ற தலைப்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி துவங்க உள்ளது.



3 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. அப்போது, ஆசியா பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டின் மூத்த மேலாளர் ஜான் நாகராஜன் மற்றும் இவோக் மீடியாவின் சில்வின் ஜே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது :- மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் உலக போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான கால்பந்து போட்டி இந்தியா அளவில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா உட்பட ஆசிய, பசிபிக் போன்ற 28 வெளிநாடுகளில் இருந்து வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர். 15 முதல் 20 வயது வரை நான்கு பிரிவாக பிரித்து போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மூன்று வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு அபுதாபில் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். சென்னையில் நடக்க உள்ள இப்போட்டிக்கான ‘டார்ச் ராலி’ காஷ்மீரில் இருந்து கன்னியாகுமாரி வரை தொடர் ஒட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. மேலும், கோவையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. தொடர்ந்து சிறப்பு விளையாட்டு வீரர்கள் கீப்பி ஊப்பி சவால்களில் கலந்து கொண்டு உற்சாகப்படுத்த உள்ளனர், என தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது போட்டியில் கலந்து கொள்ள உள்ள கோவையைச் சேர்ந்த சிறப்பு விளையாட்டு வீரர் யோகேஷ் மற்றும் வீராங்கனை அர்ச்சனா ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter