மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி : ராயல் எஸ்.சி.யை பந்தாடியது வாகா எஃப்சி

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், ராயல் எஸ்.சி. அணியை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வாகா எஃப்சி அணி அபார வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், ராயல் எஸ்.சி. அணியை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வாகா எஃப்சி அணி அபார வெற்றி பெற்றது.

கார்மெல் கார்டன் பள்ளி மைதானத்தில் சி டிவிசன் பிரிவில் நடந்த இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே கோல்களை போட்டு அசத்தலான ஆட்டத்தை வாகா எஃப்சி வெளிப்படுத்தியத்கு. போட்டி முடியும் வரை ஆதிக்கம் செலுத்திய அந்த அணி தொடர்ந்து கோல் மழையை பொழிந்தது. இறுதியில், 8-1 என்ற கோல் கணக்கில் ராயல் எஸ்.சி. அணியை வாகா எஃப்சி அணி தோற்கடித்தது. அந்த அணியின் சார்பில் அலிஸ்டர் 4 கோல்களை அடித்தார்.

மற்றொரு போட்டியில் மதுக்கரை யு.எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் போத்தனூர் எஃப்சியை வீழ்த்தியது. 

Newsletter