கோடை விடுமுறையையொட்டி உதகையில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி தொடக்கம்

நீலகிரி : கோடை விடுமுறையையொட்டி குன்னூர் நியூ சோசியல் கிளப் சார்பில் மாநில அளவிலான 3-ம் ஆண்டு டென்னிஸ் போட்டி இன்று தொடங்கியது.

நீலகிரி : கோடை விடுமுறையையொட்டி குன்னூர் நியூ சோசியல் கிளப் சார்பில் மாநில அளவிலான 3-ம் ஆண்டு டென்னிஸ் போட்டி இன்று தொடங்கியது. 



கடந்த மூன்று ஆண்டுகளாக குன்னூர் நியூ சோசியல் கிளப் சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இதில், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், 14 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு என மூன்று பிரிவுகளின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்று தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை நியூ சோசியல் கிளப் நிர்வாகிகள் தினேஷ் குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

Newsletter