கோவையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.பி.எல். ஃபேன் பார்க்

கோவை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் சேர்ந்து பார்த்து ரசிக்கும் வகையில், கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளில் ஐ.பி.எல். ஃபேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் சேர்ந்து பார்த்து ரசிக்கும் வகையில், கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளில் ஐ.பி.எல். ஃபேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மைதானத்திற்கு சென்று காணும் அனுபவத்தை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில், நாடு முழுவதும் விவோ ஐ.பி.எல். ஃபேன். பார்க்கை பி.சி.சி.ஐ. அறிமுகம் செய்துள்ளது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில், மிகப்பெரிய திரையில் கிரிக்கெட் போட்டி ஒலி பரப்பப்படுகிறது. ஒரே நேரத்தில் இந்த ஃபேன் பார்க்கில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளில் ஐ.பி.எல். ஃபேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. நாளை (மே 4) மாலை 4 மணிக்கு டெல்லி - ராஜஸ்தான் அணிகளும், இரவு 8 மணிக்கு பெங்களூரு - ஐதராபாத் அணிகளும் பலப்பரிட்சை நடத்துகின்றன. நாளை மறுநாள் (மே 5) மாலை 4 மணிக்கு சென்னை - பஞ்சாப் அணிகளும், இரவு 8 மணிக்கு மும்பை - கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன. எனவே, ஞாயிற்றுக்கிழமை அதிகளவிலான ரசிர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமில்லாமல், வார இறுதி நாட்களைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களும், கிரிக்கெட் ரசிகர்களுக்கான வலைப்பயிற்சி போட்டி மற்றும் ஃபேன் பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஃபேன் பார்க்கை கண்டு ரசிக்க எந்தவிதமான கட்டணமும் இல்லை. சுமார் 5,000 முதல் 8,000 பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Newsletter