தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கோவை வீரருக்கு வெள்ளி

கோவை : புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கோவையைச் சேர்ந்த வீரர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.


கோவை : புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கோவையைச் சேர்ந்த வீரர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

வாகோ இந்தியா தேசிய குத்துச்சண்டை கிளப்பின் சார்பில் புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டனர். 57 கிலோ எடை பிரிவில் கோவையை சேர்ந்த என்.ஜி.பி. கல்லூரியில் பி.காம் பயின்று வரும் மாணவர் எம். ரஞ்சித் குமார் பங்கேற்றார். இதில், இவர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் கொல்கத்தாவில் நடந்த இளம் குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கமும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பல்வேறு தங்கப் பதக்கங்களை வென்று குவித்துள்ளார். கோவை நேரு மைதானத்தில் நடந்த முகாமின் மூலம் தனது குத்துச் சண்டை வாழ்கையை தொடங்கிய அவர், பொது தேர்வின் காரணாமாய விளையாட்டை தொடர முடியவில்லை. தொடர்ந்து, 2018-ல் மீண்டும் குத்துச்சண்டையில் ஆர்வத்தை கொண்டு வந்தார்.

“காலையில் 2 மணி நேரம் பயிற்சிக்காக செலவிடுகிறேன். நாள்தோறும் 3 மணி நேரம் உடற்பயிற்சியகத்தில் பயிற்சி செய்கிறேன். தினமும் 30 கி.மீ. பயணம் செய்து சர்வதேச குத்துச்சண்டை பயிற்சியாளர் பிரேமிடம் பயிற்சி பெற்றேன், என்கிறார் ரஞ்சித் குமார்.

மேலும், இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வெல்வதே தன்னுடைய இலக்கு என்றும், இதற்காக கடினமாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter