மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கூடைப்பந்து போட்டி கோவையில் இன்று தொடங்கியது.


கோவை : மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கூடைப்பந்து போட்டி கோவையில் இன்று தொடங்கியது. 



தமிழ்நாடு வீல்நேர் கூட்டமைப்பு மற்றும் சிற்றுளி அறக்கட்டளையும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கூடைப்பந்து போட்டி கங்கா முதுகெலும்பு காயம் மறுவாழ்வு மையத்தில் இன்று தொடங்கியது. 



இன்றும், நாளையும் நடக்கும் இந்தப் போட்டியில், ஆண்கள் பிரிவில் கோவை, சென்னை, வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 அணிகளும், 2 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் 2 தேசிய அளவிலான வீரர்களும், 4 மாநில அளவிலான வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முதல்நாளில் இன்று 4 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன. 



இந்தப் போட்டித் தொடரில் கங்கா மருத்துவமனையின் இயக்குநர் ஜே.ஜி. சண்முகநாதன் மற்றும் காக்னிசென்ட் பி.எம்.ஓ. கமல் ராஜன், சிற்றுளி அறக்கட்டளையின் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 



Newsletter