மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை., சாம்பியன்

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் அணி வெற்றி பெற்றது.


கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் அணி வெற்றி பெற்றது. 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை வேளாண்மைக் கல்லூரிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கூடைப்பந்து மற்றும் கைப்பந்து மாணவர், மாணவியர் அணியினர் பங்கேற்றனர். மாணவிகளுக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணியை 11-1 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அணி வெற்றி பெற்றது.



இதேபோல, மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அணி இரண்டாம் இடம் பெற்றது. மாணவியர் கைப்பந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவி நந்தினி, சிறந்த கூடைப்பந்து வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளை பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் கல்லூரி முதன்மையர்கள் பாராட்டினர்.

Newsletter