தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : 14-வது தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டி கோவையில் பி.எஸ்.ஜி. தொழிற்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.

கோவை : 14-வது தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டி கோவையில் பி.எஸ்.ஜி. தொழிற்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது. 



பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டி நேற்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 11 ஆண்கள் அணி மற்றும் 7 பள்ளிகள் அணி என மொத்தம் 18 அணிகள் கலந்து கொண்டன. பள்ளி அளவில், பிரீமியர் மற்றும் சாம்பியன்ஷிப் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போட்டியானது, குழு போட்டி (அணிக்கு 9 பேர்), ரெகு (அணிக்கு 3 பேர்) மற்றும் டபுள்ஸ் என ஆட்டங்கள் நடத்தப்பட்டன. 



முதல்நாள் போட்டியில், திருநெல்வேலி அணி 2-0 என்ற செட் கணக்கில் சென்னை அணி தோற்கடித்தது. அதேவேளையில், குழு போட்டியில் திருநெல்வேலி அணி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. 



ரெகு பிரிவில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோழிக்கோடு அணி 3-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி. அலுமினி அணியைத் தோற்கடித்தது.

Newsletter