ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஷுக்களை அறிமுகப்படுத்திய 'நைக்' நிறுவனம்

கோவை : விளையாட்டு வீரர்களுக்குப் பயன்படும் வகையில், ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஷுக்களை பிரபல 'நைக்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை : விளையாட்டு வீரர்களுக்குப் பயன்படும் வகையில், ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஷுக்களை பிரபல 'நைக்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

காலணி தயாரிப்பு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'நைக்', கூடைப்பந்து வீரர்களுக்குப் பயன்படும் வகையில் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. நைக் அடாப்ட் பி.பி. (Nike Adapt BB) என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த ஷு-வானது, கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் தாங்களாகவோ அல்லது நைக் அடாப்ட் (Nike Adapt) என்ற செயலியின் மூலமாகவோ, தங்கள் வசதிக்கேற்ப இறுக்கமாகவோ அல்லது இறுக்கம் இல்லாமலோ அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

"கூடைப்பந்து போட்டியின் போது, வீரர்களின் கால்களின் அளவு விரைவில் மாறுபடும். பின்னர், ஷுக்களை சிறிது அவிழ்த்துவிட்டு, ரத்த ஓட்டத்தின் அளவை அதிகரித்த பிறகு, மீண்டும் மாட்டிக் கொள்வார்கள். இதையடுத்து, புதிய உத்வேகத்துடன் போட்டியை தொடர வேண்டிய நிலை உள்ளது," இவ்வாறு கூறுகிறார் நைக் புது படைப்பு இயக்குநர்.

பொதுவாக, கூடைப்பந்து வீரர்கள் டைம் அவுட் நேரத்தின் போது, தங்களது ஷுக்களை கழற்றிவிட்டு, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்திக் கொள்வர். பின்னர், மீண்டும் ஷுக்களை அணிந்துவிட்டு, போட்டிக்கு செல்வர். வயர் இல்லாத சார்ஜர் முறையில் சார்ஜ் செய்யப்படுகிறது. மேலும், இந்த ஷுக்களில் இருக்கும் எல்.இ.டி. திரையினைப் பயன்படுத்தி கலரை மாற்றிக் கொள்ளலாம். அதோடு, நிறுவனம் செய்யும் சஃப்ட்வேர் அப்டேட்களை, இந்த ஷுக்கள் தானாகவே பெற்றுக் கொள்ளும். 

மேலும், இந்த ஷுக்களில் வாட்டர் ஃப்ரூவ், உயர்வெப்பநிலை, பயன்பாட்டின் காலம் போன்றவற்றை பரிசோதிக்கப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இந்த ஷுக்கள், பிப்ரவரி 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஜனவரி 15-ம் தேதி முதல் இந்த ஷுக்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ. 25,000 ஆகும். 

Newsletter