எஸ்.கே.ஏ.எஸ்.சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி : ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரிக்கு வெற்றி

கோவை : மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற எஸ்.கே.ஏ.எஸ்.சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.

கோவை : மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற எஸ்.கே.ஏ.எஸ்.சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.



கோவை மாவட்டம், ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், உடற்கல்வி துறை இணைந்து 'எஸ்.கே.ஏ.எஸ்.சி., கோப்பை'க்கான போட்டியை நேற்று நடத்தியது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கல்லூரி மைதானத்தில் நடந்தது. 

இந்த போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், பி.பி.ஜி., தொழில் நுட்ப கல்லுாரியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி லாவகமாக விளையாடி வெற்றியை தன் வசமாக்கியது. இதனிடையே, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி மிதுன், ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் 101 ரன்களை குவித்து இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டார். 



மேலும், பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த 25 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்வினை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேபி ஷகிலா தொடங்கி வைத்தார். 

Newsletter