என்னது 7 ஆயிரம் வருஷம் முன்னாடியே இந்தியர்கள் விமானத்தை கண்டுபிடிச்சாங்களா?

மும்பை: ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்கும் பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே, இந்தியர்கள் விமானத்தை கண்டுபிடித்து பயன்படுத்தியதாகவும், அந்த விமானங்கள் பிற கோள்களுக்கும் செல்லும் திறன்மிக்கதாக இருந்ததாகவும், மும்பையில் நடைபெறும் 102வது, இந்திய அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பையில், 102வது அறிவியல் மாநாடு நடைபெற்றுவருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் பல ஆய்வாளர்களும் தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்து வருகின்றனர். கேப்டன் ஆனந்த் போதாஸ் மற்றும் அமேயா யாதவ் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்துள்ள ஆய்வு கட்டுரை மிகவும் சுவாரசியமாக உள்ளது.

கோள்களுக்கும் சென்ற விமானம்

அந்த கட்டுரையின் விவரம் இதுதான்:

விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியர்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துவைத்திருந்தனர். பரத்வாஜ் முனிவர், ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ள ஸ்லோகத்தில், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கும், மற்றொரு கண்டத்திற்கும், ஏன் மற்றொரு கோளுக்குமே, விமானங்களை செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். இதற்காக 97 புத்தகங்களை உதாரணத்திற்கு காண்பித்துள்ளார்.

விமான தயாரிப்பில் முன்னோடி



விமான தயாரிப்பு குறித்த 500 வகை கொள்கைகள் குறித்து சமஸ்கிருத ஸ்லோகங்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால், தற்போதைய விஞ்ஞானிகள் கூட 100 கொள்கைகளைத்தான் கண்டுபிடித்துள்ளனர். 8 பிரிவுகளின்கீழ் விமான தயாரிப்பை கற்றுத்தரும் நூல்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. தற்போதைய விமானங்களைவிட சக்தியிலும், சொகுசிலும், இந்திய முன்னோர்கள் கண்டுபிடித்த விமானங்கள் சிறப்பானவையாக இருந்துள்ளன. இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு இந்தியா வழிகாட்டி



மற்றொரு ஆய்வு கட்டுரையில், இந்தியர்களின் மருத்துவ ஞானம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் நுட்பத்தை பல ஆயிரம் காலம் முன்பே இந்தியர்கள் தெரிந்து வைத்திருந்ததாகவும், இதற்காக 20 வகையான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 101 வகையான உபகரணங்களை அக்கால மருத்துவர்கள் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதான் பெஸ்ட்



நாக்பூரை சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் பேராசிரியர் ஏ.எஸ்.நேனே சமர்ப்பித்துள்ள ஆய்வுக் கட்டுரையில், பழைய காலத்து இந்திய பொறியாளர்கள், இப்போது உள்ள பொறியாளர்களைவிட திறமையானவர்களாக விளங்கியுள்ளனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

தாழ்வுமனப்பான்மையில் இந்தியர்கள்?



ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தவர்களில் பெரும்பாலானோர், இன்றைய இந்திய விஞ்ஞானிகள், பழைய கால சமஸ்கிருத இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கும், தகவல்களை சேகரித்தால், நவீன கண்டுபிடிப்புகளுக்கு அது உதவிகரமாக இருக்கும் என்று, பரிந்துரைத்துள்ளோனர்.

மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர், ராஜன் வேளுக்கர் கூறுகையில், வேதங்களை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, வேதங்களில் என்ன உள்ளது என்பைத படித்து பார்ப்பது நல்லது என்றார். விஞ்ஞானி விஜய் பட்கர் கூறுகையில், தற்போதுள்ள இந்தியர்கள் அடிமை மனோபாவத்தில் உள்ளனர். வெளிநாடு நமது திறமையை ஒப்புக்கொண்டால்தான் நாம் திறமைசாலி என்று நாமே ஒப்புக்கொள்ளும் நிலையில்தான் நமது மனோபாவம் உள்ளது. வெளிநாட்டினர் செய்த பிறகுதான் நாம் அதை பின்பற்ற தொடங்குகிறோம்" என்றார்.

ஆன்மீக மாநாடாக மாறிய அறிவியல் மாநாடு



அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த விவரங்களை படித்து பார்த்தோருக்கு, ஏதோ ஆன்மீக மாநாட்டுக்கு வந்துவிட்டமோ என்ற எண்ணம்தான் தோன்றியது. ஏனெனில் எல்லாவற்றையும் கண்டுபிடித்தது இந்தியாதான், சமஸ்கிருதத்தில் அதற்கான குறிப்பு உள்ளது என்று அறிவியல் ஆய்வு கட்டுரைகள் கூறியுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்பிட்டாக.. அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஷன் கூப்பிட்டாக... என்ற சினிமா டயலாக்தான் இதைப் பார்த்ததும், நினைவுக்கு வருகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...