இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

டெல்லி : இந்தியாவின் அரணான இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


டெல்லி : இந்தியாவின் அரணான இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமிக்குக் கீழே பல நகரும் புவித்தட்டுக்கள் (Plates) உள்ளன. பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகும் போது, இந்த தளத்தட்டுகள் கூடுதலாக இடம்பெயர்வதால் ஏற்படும் அதிர்வுதான் நிலநடுக்கம் என ரிக்டர் அளவில் கூறப்படுகிறது. இந்நிலையில், பனி பிரதேசமான இமயமலையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஆய்வாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர்கள் சிலர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில் இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்குப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

அந்தப் புவியியல் இதழ் ஆராய்ச்சியின் படி, ஏற்கனவே நேபாளம் மற்றும் சர்காலியா ஆகிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சியையும் ஒப்பிடுகையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக் கோள் ஆய்வு இந்தத் தகவல்களை மறுப்புத் தெரிவிக்காமல் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்படும் போது, 600 கிமீ தூரம் வரையில் பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1315 மற்றும் 1440 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்படக்கூடிய இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் நிலநடுக்கும் ஏற்பட்டால் நேபாள - இந்திய எல்லை பகுதியில் இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...