கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு பூம்புகாரில் விளக்கு திருவிழா கண்காட்சி

கோவை, பெரியகடை வீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை மாதம் தீபம் பண்டிகையை முன்னிட்டு விளக்கு திருவிழா கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை இம்மாதம் துவங்கி உள்ளது. இதனை கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் மதுராந்தகி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.


பூம்புகார் விற்பனை நிலையம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, விஜய தசமி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது. இதனையடுத்து கார்த்திகை மாதம் தீபம் பண்டிகையை முன்னிட்டு விளக்கு திருவிழா கண்காட்சி பண்டிகையை துவங்கி உள்ளது. இக்கண்காட்சி இம்மாதம் 17ம் தேதிவரை தினசரி கலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.


இக்கண்காட்சியில், பித்தளையில் காமாக்ஷி தீபம், நந்த தீபம், மலபார் தீபம், அஷ்டோத்திர தீபம், லக்ஷ்மி தீபம், அன்னம் மேஜை விளக்கு, அன்னம் தெலுங்கு விளக்கு, பாலாடை விளக்கு, லக்ஷ்மி தாமரை விளக்கு, அடுக்கு தீபம், குபேர தீபம் போன்ற இன்னும் ஏராளமான விளக்குகள் விற்பனைக்கு உள்ளன.

இது குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில்;

பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விளக்கு திருவிழா கண்காட்சியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.  கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 70 சதவீதத்திற்கும் மேல் வந்துள்ளனர். இந்த ஆண்டு விளக்கு திருவிழாவில் ரங்கநாதர் பித்தளை விளக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.



மேலும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்கள் அனைத்தும் தரமுடையதாக இருப்பதால், பொதுமக்கள் நம்பிக்கையுடன் வாங்கி செல்கின்றனர். வாங்கும் பொருட்களுக்கு 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூபாய் 15 லட்சம் வரை விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.



Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...