கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. குடிநீர், சாலை, சுகாதாரம், தெருவிளக்கு பணிகளில் மக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. அமைச்சர் சீரநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.


Coimbatore: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இன்று (27.06.2026) நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விரிவான ஆய்வு இக்கூட்டத்தில் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய அமைச்சர் வி.சம்பத்குமார், குடிநீர் திட்டப் பணிகள், சாலை பணிகள், சுகாதார தூய்மை பணிகள் மற்றும் தெருவிளக்குகள் சம்பந்தமாக பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். அடிப்படை வசதிகளான இவற்றில் குறைகள் ஏதுமின்றி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.



26.06.2026 அன்று மேற்கு மண்டலம், வார்டு எண் 75-க்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அமைச்சர் திடீர் ஆய்வு செய்து, சரிசெய்திட அறிவுறுத்தினார். பின்னர், வார்டு எண் 40-க்குட்பட்ட தொண்டாமுத்தூர் சாலை, வீரகேரளம் பகுதியில் கிருஷ்ணம்பதி குளத்திற்கு செல்லும் வாய்க்கால் பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர் நல அலுவலர் Dr.சுபாஷ் காந்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...

பண்டிகை காலம்: சென்னை-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அக்டோபர் முதல் நவம்பர் 2026 வரை சென்னை-கொல்லம் இடைய...

EPFO கட்டாய உறுப்பினர் ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்வு

EPFO-வில் கட்டாய உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ₹15,000-ல் இருந்து ₹25,000 ஆக செப்டம்பர் 17 முதல் உயர்த்தப...