தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதிகளைச் சேர்ந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவி செய்து வரும் சுகாதார மையம் குறித்து தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தொழு நோயால் பாதிக்கப்பட்ட நாங்கள் சுமார் 125 குடும்பத்தினர் தங்களது குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு கோவை வடவள்ளி அருகே கடந்த 40 வருடமாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுககு உதவி செய்யும் வகையில் கிராம சமூக சுகாதார மையம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

அந்த மையத்தின் மூலமாக எங்களுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு வசதி அனைத்தும் தற்போது வரை செய்துவருகிறார்கள்.

தற்போது எங்களுக்கு உதவி செய்யும் சுகாதார மையத்தின் மீது வி.சியாம் என்பவர் தவறான வதந்திகளை செய்தி பத்திரிகையிலும் மற்றும் சமூக வலைதளத்திலும் பரப்பி உள்ளார். இதனால், 125 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, சியாம் மீதும், அந்த செய்தி பத்திரிகை நிருபர் மீதும் கோவை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...