பணம் வராத ஏடிஎம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து மாதர் சங்கம் நூதன போராட்டம்

கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பணம் வராத ஏடிஎம் மையங்களுக்கு மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.



மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாது என திடீரென அறிவித்தது. இதனையடுத்து அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, பெண்கள் மளிகை பொருட்களை வாங்க முடியாமலும், அன்றாட வரவு, செலவுகளை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை மாற்ற குவிந்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் பெரும் ஏமாற்றத்தை அனுபவித்து வருகின்றனர்.



மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பணம் வராத ஏடிஎம் மையங்களுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மாதர் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பணம் வராத ஏடிஎம் மையத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாதர் சங்கத்தினர், பருப்பு வாங்க காசில்லை, பால் வாங்க காசில்லாம மத்திய அரசு செய்து விட்டதே என்று ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்.அமிர்தம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமான மாதர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாதர் சங்கத்தினரின் இந்த நூதனப் போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...