ரேஷன் கார்டில் ஆதார் எண்களை இணைக்க இனி ஸ்மார்ட் போன் போதும்

தற்போது, நியாய விலைக் கடைகளில் ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பதிவு செய்ய முடியாதவர்களுக்காகவும், இதனால் நியாய விலைக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

நமது ஸ்மார்ட்போனில் Google Play App Store சென்று ''TNEPDS'' என்று டைப் செய்தால், ஒரு இலவச செயலி வரும். அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் அந்த செயலியைத் திறந்து, ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) குறுஞ்செய்தியாக நமது தொலைபேசிக்கு வரும்.

அந்த எண்களை செயலியில் பதிவிட்டவுடன் செயலி திறக்கப்படும். அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக செல்பேசியில் உள்ள கேமரா திறக்கும். அதனை ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு ஆதார் எண் திரையில் காண்பிக்கப்படும்.

உடனே நாம் ''சமர்ப்பி'' என்ற பட்டனை அழுத்தினால் போதும், நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும். முதலில் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்யவேண்டும்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...