அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,453 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைகண்காணிக்க, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அன்னூர் காவல் நிலைய போலீசார் கருமத்தம்பட்டி–அன்னூர் சாலை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தை தணிக்கை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தில் இருந்த, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (44), ரமேஷ்குமார் (43), மாதேஸ்வரன் (42) ஆகியோரை கைது செய்த போலீசார், 

சுமார் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களும், அந்த நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் அல்லது சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....