அதிமுகவினர் நடத்தும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாறுவதாக -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு

சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் என அதிமுகவினர் நடத்தி வரும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்து வருவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது கால அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறித்தினார். ஒரு மொழியை விரும்பி படிப்பதை தடுப்பது எப்படி தவறோ அதைப் போலவே ஒரு மொழியை மற்ற மாநில மக்களின் மீது திணிப்பதும் தவறு எனக்கூறிய அவர் கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்திக்க பிரதமர் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறித்தினார். ஊழலில்லா தமிழகத்தை உருவாக்க தங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தவர். நடிகர் கமலஹாசனின் கருத்துக்களை ஊழலுக்கு எதிரான கருத்துக்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என தெரிவித்தார். 

ஆனால், கமலின் கருத்துக்களுக்கு பதில் கருத்து சொல்லி பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப தமிழக அமைச்சர்கள் முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முன்பே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய தீர்வை குடியரசு தலைவர் மூலமாக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் மெட்ரோ இரயில் திட்டம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...