கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடங்கியது. முதல் நாளில் 250 தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில் பயன் பெற்றனர். இம்முகாம் ஜூலை 21 வரை நடைபெறும்.


Coimbatore: கோவை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் இன்று (08.07.2026) தொடங்கியது. முதல் நாளில் சுமார் 250 தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில் பயன் பெற்றனர்.



ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 08.07.2026 முதல் 21.07.2026 வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.

இன்று மத்திய மண்டலம், சீத்தாலட்சுமி நகர்ப்புர முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற மருத்துவ முகாமில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருதயம், நுரையீரல், கண்பல், எலும்பு மூட்டு மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவம், தோல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நல மருத்துவம் ஆகிய சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஹீமோ குளோபின் அளவு கண்டறிதல், இரத்தவகை கண்டறிதல், இரத்த சக்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு, பித்த திரமி, யூரியா கிரியட்டினின், V.D.R.L, H.I.V மாதிரி பரிசோதனை, E.C.G ஸ்கேன், கர்ப்பப்பை வாய் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவைப்படும் பணியாளர்களுக்கு மேல்சிகிச்சைக்காக இம்முகாமில் பரிந்துரை செய்யப்பட்டது.

நாளை (09.07.2026) முதல் தொடர்ந்து சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இன்று நடைபெற்ற இம்முகாமில் மாநகர நல அலுவலர் Dr.சுபாஷ்காந்தி, மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...