கோவையில் துவங்கியது 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா

கொடிசியா நடத்தும் 3-ஆவது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துடன் (பபாசி) இணைந்து, கொடிசியா கடந்த 2 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்நிலையில், 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாத்தில் துவங்கியது. இதனை அகில இந்திய புத்தக பதிப்பாளர் சங்க தலைவர் பல்தேவ்பாய் சர்மா, எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 



இந்தக் கண்காட்சியில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், புது தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 170 பதிப்பாளர்கள், 265 அரங்குகளில் புத்தகங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இதில், தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் நேரமாக உள்ளது.



நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்தேவ்பாய் சர்மா பேசுகையில், ''புத்தகங்களை மதித்து போற்றிய யாரும், தோல்வியுற்றதாக இல்லை. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் புத்தகங்களை விற்பனை செய்ய, இதுபோன்ற கண்காட்சிகள், பெரிதும் உதவியாக இருக்கும்,'' என்றார். கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசுகையில், ''மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே, தொழில்கள் நிலைக்க முடியும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதை அடிப்படையாக கொண்டு தான், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது,'' என்றார்.



பின்னர், கோவை புத்தக கண்காட்சி சார்பில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, படைப்பாளருக்கான "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது. இறுதியில் கொடிசியா துணைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.



Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...