நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் கொள்ளை


நடிகர் தலைவாசல் விஜய்க்கு சொந்தமாக கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (27). ‘லிப்ட்’ தயாரித்து நடத்தி வரும் இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தனது நிறுவனத்திற்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை கதவை உடைத்து உள்ளே சென்றனர். மேலும், அலமாரியில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 சவரன் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் மோதிரங்களை கொள்ளையடித்து சென்றனர்.

நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிய போது இக்கொள்ளை சம்பவம் நடந்தது ராஜேந்திரனுக்கு தெரிவந்துள்ளது. தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு  செய்தனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 2 கைரேகைகள் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...