கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகளை பயன்படுத்திய வாகனங்கள் மீது கோவில்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து, அவற்றை அகற்றியதுடன் அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை-சக்தி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சில தனியார் பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை பாதிக்கும் வகையிலான உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த LED விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்து அபாயம் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோவில்பாளையம் போலீசார் இன்று சக்தி சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.



சோதனையில், விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து அவை அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.



விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய விதிமீறல் உபகரணங்கள் மீது போலீசார் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...