கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் V. Bavan Kumar Reddy IPS போதைப்பொருள்களற்ற சமூகத்தை உருவாக்குவது இளைஞர்களின் கடமை என வலியுறுத்தினார். மாணவர்கள் சைபர் கிரைம் குறித்தும் எச்சரிக்கப்பட்டனர்.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துளிர்-2026 என்ற தலைப்பில் ஜூலை 6, 2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மையர் V. ராகவி வரவேற்புரை நிகழ்த்தினார்.



துணைவேந்தர் Dr. S. ரவி தலைமையுரையில், போதைப் பழக்கத்தால் மாணவர்களின் உடல் மற்றும் மன நலம் சீரழிவதை விரிவாக எடுத்துரைத்தார். இளைஞர்கள் இத்தகைய தீய பழக்கங்களில் இருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



கோவை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் V. Bavan Kumar Reddy IPS முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வின் அவசியத்தை மாணவர்களுக்கு விளக்கினார்.

போதைப்பொருள்களற்ற சமூகத்தை உருவாக்குவது இளைஞர்களின் அடிப்படைக் கடமை என்பதை வலியுறுத்தினார்.

மேலும் அவர், மொபைல் போன் மற்றும் இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது சைபர் கிரைம் நிகழாதவாறு தற்காத்துக்கொள்ள சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக அவசியம் என்று அறிவுறுத்தினார். இணைய தளங்களில் பகிரும் தகவல்களில் கவனமாக இருக்க வேண்டும் என மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் காவல் கண்கானிப்பாளர் முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பதிவாளர் P.V. பிரதீப் உறுதிமொழியை வாசித்தார். அனைத்து முதலாமாண்டு மாணவர்களும் போதைப்பொருள்களை தவிர்ப்பதாகவும், மற்றவர்களையும் விழிப்புணர்வுபடுத்துவதாகவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மதுக்கரை காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கற்பகம் கல்விநிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் Dr. K.M.G. ஆதிபாண்டியன் இந்நிகழ்ச்சியை திறம்பட ஒருங்கிணைத்தார்.

இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே போதைப்பொருள் தவிர்ப்பு குறித்த உணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று கல்விக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...