அரசு அதிகாரிகள் ஊழல் புகார் மீது நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதாக நான்கு மாதங்களுக்கு முன்பு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக புகார் அளித்ததிற்கு என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை மாவட்ட நிர்வாகத்தில் கட்டுப்பாடற்ற வெளிப்படையான ஊழல் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க வலியுறுத்தியும் கடந்த மார்ச் 6ம் தேதியன்று ஊழல் தடுப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி இன்று ஊழல் தடுப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வந்து புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, ஊழல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தனி அலுவலகம் உள்ளது என்றும் அதனை அணுகுமாறும் மாவட்ட நிர்வகத்தால் ஊழல் தடுப்பு இயக்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த ஊழல் தடுப்பு இயக்கத்தினர், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பேசுவதாக மாவட்ட ஆட்சியர் மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினம்தோறும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து தங்களுடைய குறைகளை சொல்லும் நிலையில், சாதாரண பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...