பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி சார்பில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து, இன்று வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் செய்யப்பட்டது.



பின்னர், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. சில சாலை ஓரக் பூக்கடைகளில் பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்தாமல், வாழை இலை மூலம் பூக்களைக்கட்டி வியாபாரம் செய்தனர்.



இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இருந்தனர்.



Newsletter

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...