கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற்றல் பணிகள் ஆய்வு மேற்கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். குழந்தைகள் வருகைப் பதிவேடு சரிபார்க்கப்பட்டது.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27-ல் இன்று (13.08.2026) காலை பல்வேறு பகுதிகளில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



பீளமேட்டு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டார். அங்கு குழந்தைகளின் வருகைப் பதிவேடு விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.




தொடர்ந்து கல்கி நகர் பகுதியில் சாலையோர குப்பைகள் அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், தினசரி முழுமையாக சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். சாய்பாபா கோயில் அருகே சாலையோரத்தில் கிடந்த மரக்கழிவுகளை உடனடியாக முழுமையாக அகற்றவும் உத்தரவிட்டார்.




ரங்கம்மாள் கோயில் வீதியில் தினசரி குப்பை சேகரிக்கும் பேட்டரி ஆட்டோ முறையாக வருகிறதா என்பதை ஆய்வு செய்தார். பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்மூலம் கழிவு மேலாண்மை திறம்பட நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...