வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்!

தொழில் தொடங்க விழையும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (யூ.ஓய்.இ.ஜி.பி) திட்டத்தின் கீழ் கடன் பெற மாவட்ட தொழில் மையத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் யூ.ஓய்.இ.ஜி.பி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம்  முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் அதிகபட்சமாக ரூ.1,25,000 வழங்கப்படும்.

தொழில் தொடங்கும் பொதுப்பிரிவினர் திட்டமதிப்பில் 10 சதவீதம் முதலீடு செய்யவேண்டும். சிறப்புபிரிவினரான பட்டியலிடப்பட்ட இனத்தவர் /  பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / மகளிர் / முன்னாள் படைவீரர்கள் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்கள் ஆகியோர் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.  மீதமுள்ள முதலீட்டுத்தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரின் குடும்ப ஆண்டு வருமானம் 1,50,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்திற்கு ஆதாரமாக சான்றுதி அலுவலர் (நோட்டரி பப்ளிக்) முன்னிலையில் மனுதாரர் அளித்த ஆணை உறுதி ஆவணம் சமர்ப்பித்தாலே போதுமானது. இக்கடன்கள் பெறுவதற்கு சொத்துப்பிணையம் தேவையில்லை. மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயதுரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இக்கடன் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை மனுதாரர்கள் நேரடியாகwww.dickovai.com என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடன் விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம், தாமே தயாரித்த திட்ட அறிக்கை, கல்விச்சான்று, குடும்ப அடையாள அட்டை, இனம்,  முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றிற்கான சான்று நகல்களுடன் இரட்டை நகல்களில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2 இராஜ வீதி, கோயம்புத்தூர் - 641  001  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...