ஆர்.எஸ். புரம் மற்றும் ஹோப் காலேஜ் பகுதியில் 46 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கோவை மாநகராட்சி 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டது. இத்தடை உத்தரவினை மீறி மாநகராட்சியின் எல்லைக்குள் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கும் அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுமார் 377 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.



மேலும், அதனை தொடர்ந்து இந்த வாரமும், ஐந்து மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆய்வில் மேற்கு மண்டலமான 23-வது வார்டு பகுதி ஆர்.எஸ். புரம் திவான் பதூர் (டி.பி) சாலையில் 25 கிலோ மதிப்பில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர். மொத்தம் 3000 ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் இந்த ஆய்வினை மேற்கொண்டார்.



அதேபோல், கிழக்கு மண்டலம் 37-வது வார்டு அவிநாசி சாலையில் உள்ள ஹோப் காலேஜ் பகுதியில் கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டத்தில் 21 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்தவர்களிடம் ரூபாய் 12,500 வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டது.





Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...