253 கடைகளில் சுமார் 377 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!


கோவை மாநகராட்சியில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 377 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 18.03.2016 -ம் தேதிய அறிவிப்பின்படி மாநகராட்சியின் சுற்றுபுறசூழலைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் அழகினை பராமரிக்கவும், பாதுகாக்கவும், 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.



இத்தடை உத்தரவினை மீறி மாநகராட்சியின் எல்லைக்குள் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களும் அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மே 5ம் தேதியன்று மொத்தம் 89 கடைகளில் 375.5 கிலோ 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிழக்கு மண்டலம் 61, 62, 63 மற்றும் 64-வது வார்டுக்குட்பட்ட திருச்சி ரோடு பகுதியில் 56 கடைகளில் 31 கிலோவும், மேற்கு மண்டலம், 10, 12, 16, 18, 19, 22 மற்றும் 23-வது வார்டுக்குட்பட்ட டி.பி.ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, என்.எஸ்.ஆர்,ரோடு, தடாகம் ரோடு, லிங்கனூர் ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு மற்றும் கல்வீரம்பாளையம் ஆகிய பகுதியில் 95 கடைகளில் 201 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு மண்டலம், 28-வது வார்டுக்குட்பட்ட சத்தி ரோடு பகுதியில் 19 கடைகளில் 45 கிலோவும், தெற்கு மண்டலம், 90 மற்றும் 91-வது வார்டுக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் 38 கடைகளில் 10 கிலோவும், மத்திய மண்டலம், 50, 51, 80 மற்றும் 83-வது வார்டுக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு, 7-வது வீதி விரிவாக்கம், 100 அடி ரோடு, நேரு வீதி, தாமஸ் வீதி, ராஜ வீதி மற்றும் டி.கே.மார்க்கெட் ஆகிய பகுதியில் 45 கடைகளில் 91 கிலோவும், ஆகமொத்தம் 253 கடைகளில் 377 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பொது மக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறுபெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...