வைசியால் வீதி பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம்- பொதுமக்கள் அவதி


கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வரும் வறட்சியின் காரணமாக அத்யாவசியத் தேவைக்குக்கூட நீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் இரு வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என்றே விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு நிலவி வருகிறது.



இந்நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் சாக்கடை நீர் கலந்து வருவதாக வைசியால் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இன்று வைசியால் வீதி வித்யாலயா பள்ளி அருகே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அந்த நீர் முழுவதும் சாக்கடை நீர் கலந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், வைசியால் உள்ளிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்றே சாக்கடை நீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாக்திடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...