போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகரில் இரு சரகங்களுக்கும், மாவட்டத்திற்கும் சிறப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.


Coimbatore: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதுமான காவலர்கள், பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.




அதேபோல தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று, மாநகருக்கு இரண்டு என போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு மாநில அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.




இதையடுத்து கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகளை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரு சிறப்புப் படைகளையும் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.




இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையினர் கூறியதாவது: போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து வருகின்றன. அதற்கான காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவையான வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.




அதன்படி, கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு சரகத்திற்கு தலா ஒரு SI மற்றும் 5 காவலர்களும், அவர்களுக்கு தலா ஒரு வாகனமும் தயார் நிலையில் உள்ளது. இவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.




அதேபோல மாவட்டத்திற்கும் ஒரு SI தலைமையில் 5 காவலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஜோசப் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் அவர்கள் செயல்படத் தொடங்குவார்கள். இந்த சிறப்புப் படைகள் மூலம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...