நீட் தேர்வினை எதிர்கொள்ள தமிழக பாடதிட்டங்கள் மாற்றப்படும்- கோவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கல்வித்துறையில் பாடதிட்டங்கள் மாற்றுவது குறித்து உயர்மட்ட குழு கருத்துக்களை வழங்கி இருப்பதாகவும், நீட் தேர்வினை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி தமிழக பாடதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பள்ளி கல்வியில் ரேங்கிங் முறை என்ற மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கும் தமிழகத்தின் இந்த திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கின்றது.

மாணவர்கள் அனைவருக்கும் செல்போன் மூலம் தேர்வு முடிவு குறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி ஒரு சிலருக்கு மட்டும் செல்லாமல் இருக்கலாம். தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே புதிய நடைமுறையை அறிவித்தால் மட்டுமே மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதால் நேற்று புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய நடைமுறையினால் மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தரவரிசை என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. மேலும் புதிய பாடத்திட்டம் குறித்து உயர்மட்ட குழு கருத்துக்களை வழங்கி இருக்கிறது. அதனை செயல் படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டு வருகிறது. தமிழக கல்வி திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் துறையின் மூலமாகவே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த மனுவினை ஜனாதிபதிக்கு அனுப்ப இயலும். நீட் தேர்வினை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி தமிழக பாடதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். நீட் தேர்வில் கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டது குறித்து மத்திய அரசுதான் பதில் அளிக்க வேண்டும்" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.

இதைத்தொடர்ந்து, இரு அணிகள் இணைப்பிற்கு அமைச்சர்கள் சீனிவாசனும், ஜெயகுமாரும் தடையாக இருக்கின்றனரா என்ற  செய்தியாளர் கேள்விக்கு, இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...