கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்


பெண்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதும், முறையான பயிற்சி பெறுவதற்குமாக அவர்களுக்கு இலவச பயிற்சி முகாமை கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.



இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பழகுநர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள போக்குவரத்து பூங்காவிக் நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி, துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு பழகுநர் உரிமங்களை வழங்கினர்.



தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், 'தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் நடக்கும் விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கையை விட இது அதிகமாக உள்ளது. எனவே, அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்து சரியான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அல்லாது, பாதசாரிகளுக்கும் விதிமுறைகள் உள்ளது. அனைத்து தரப்பினரும் சாலை விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துக்களை குறைக்க முடியும்' என்றார்.



இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...