கொடநாடா கொலை நாடா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

கோவையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியத்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.

அமித்ஷா, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 90 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியே தமிழகம் ஆகும். தமிழக மக்கள் ஆட்சியில் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் பாஜக ஆகும். 

மின்சாரத்திற்காக 3 ரூபாய் 33 காசுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறேன் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மின் வெட்டு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் மின்வெட்டே இங்கு இல்லை என வாதாடி வருகிறார். கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொடநாடா அல்லது கொலைநாடா என்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவும், திமுக-வும் ஆட்சிசெய்யும் தகுதியை இழந்துவிட்டன. இனி வரும் தேர்தல்களில் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கும்" என பேசினார்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...