உடுமலையில் பெரியார் பிறந்தநாள் பேனரில் நிர்மலா சீதாராமன் படம் இடம்பெற்றதால் சர்ச்சை

உடுமலையில் பெரியார் 146வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரில் நிர்மலா சீதாராமன் படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு இந்த பேனரை வைத்துள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட கச்சேரி வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேனர்களில் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூரணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இது குறித்து முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாஷா கூறுகையில், "மனித குலத்திற்கு எதிரான சாதி மத அதிகார ஆணவங்களின் வேர் அறுக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெரியாரின் 146ஆவது பிறந்தநாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம். சமீபத்தில் ஜிஎஸ்டி கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவித்த அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன் அவர்களை அவமதிக்கும் விதமாக சாதிய வன்முறையுடன் செயல்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் புகைப்படத்தை தொடர்புபடுத்தி பிறந்தநாள் பரப்புரை செய்தி வெளியிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

உடுமலை பகுதியில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் நிர்மலா சீதாராமன் இருக்கும் படம் தற்போது உடுமலை பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...