வால்பாறையில் புதிய சாலையில் பள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்

வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து, சாலை அமைப்பில் குறைபாடு காரணமாக பள்ளம் உருவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி மூலம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 12 கோடி மதிப்பில் 13 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பழைய சாலைக்கு மேல் சிறிது கற்கள் போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



ஊசிமலை எஸ்டேட் தண்ணி கான் செட் என்ற பகுதியில் சிறிய ஓடை உள்ளது. கடந்த நாட்களில் மழை வராமல் ஓடையில் தண்ணீர் குறைவாக காணப்பட்டது. ஆனால் சில தினங்களாக அதிக கனமழை பெய்ததால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து வழக்கம் போல் ஓடையின் பாதையில் தண்ணீர் சென்றது. தற்போது ஓடையின் மேல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் தடைப்பட்டுள்ளது.

வழக்கமாக சாலை அமைக்கும்போது சாலையின் அடியில் ஓடை இருந்தால் அங்கு பெரிய குழாய் பதித்து பின்பு தான் சாலை அமைப்பது வழக்கம். ஆனால் தற்போது பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் குழாய் வைக்காமல் ஓடைக்கு மேல் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஓடையில் சீராக தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு அப்பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை பணி நடைபெறும் போது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடாமல் இருப்பதுதான் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்கள் அப்பகுதியில் பணி செய்யும் பொழுது அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...