பயணச்சீட்டு பரிசோதனையில் ஒரே நாளில் அதிக தொகை வசூலித்து சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகள் சாதனை

பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணம் செய்வதை குறைக்கும் பொருட்டும், பயணிகளிடையே பயணச்சீட்டு வாங்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு தொடர்ந்து பல்வேறு நாட்களில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி கடந்த ஏப்ரல் 2ம் தேதியன்று சேலம் கோட்ட வணிகவியல் பிரிவின் 231 பயணச்சீட்டு பரிசோதகர்கள் சேலம் கோட்ட வணிக மேலாளர் கே.மாது தலைமையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர், கரூர் உள்ளிட்ட சேலம் கோட்டத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 755 நபர்களிடமும், மற்றும் சரியான தொகை செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சரக்குகளை எடுத்துச் சென்ற 11 நபர்களிடமும் என மொத்தம் 3,37,595 ரூபாய் பயணச்சீட்டு தொகை, சரக்குக்கட்டணம், மற்றும் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

இத்தொகை சேலம் கோட்டம் துவக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை ஒரு நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்சத் தொகையாகும். இதற்கு முன்னர், 5.03.2017 அன்று இவ்வாறு நடத்தப்பட்ட திடீர் பயணச்சீட்டு பரிசோதனையின் போது வசூலிக்கப்பட்ட 2,47,025 ரூபாய்தான் அதிகபட்ச தொகையாகும்.

சேலம் பயணச்சீட்டு பரிசோதனைக் குழுவின் பறக்கும் படையை சேர்ந்த எம்.மனோ செல்வம் மற்றவர்களை விட அதிகமாக அதாவது 35,780 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதத் தொகையாக வசூலித்து சிறப்பாக செயல்பட்டார்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் அவர் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பாராட்டியதுடன், தொடர்ந்து இத்தகு திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...