தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்!


கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்கப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் தொடக்கி வைத்தார். 



இது குறித்து க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் கோவையில் துவங்கியது. இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.



இதில் 1,60,991 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு குழந்தைகள் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக 33 மாநகராட்சி, நகர் நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், 45 பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளின் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம் இன்று (ஏப்ரல் 2) மற்றும் இம்மாதம் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்றார்.

Newsletter

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...