லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் பம்புசெட் நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் தகவல்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கோவையில் இயங்கி வரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட்டு பம்புசெட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிர்பாராதது. மேலும், கோவையில் இயங்கிவரும் பம்புசெட்டு நிறுவனங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் பெரும் பின்னடைவினை ஏற்படுத்தும். சுமார் 50 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோவையில் இயங்கிவரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மூலப் பொருட்கள் வரத்து தடைபட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல கோடி பெறுமானமுள்ள பம்புசெட்டுகள் விற்பனைக்கு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தொழிற்சாலைகளில் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களுடன் கலந்து பேசி இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சைமா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...