கிளாசிக் போலோ-வின் புதிய 'க்ரீன் பேக்'

கோவை மாநகரில் விரைவில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ள நிலையில், கிளாசிக் போலோ ஆடையகம் சார்பில் இயற்கை முறையில் தயாரித்த பைகள் அறிமுகமாகின்றன. முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் ஆன துணிப்பைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவுள்ள நிலையில் இதற்கான அறிமுக விழா நாளை, 'மை ஷாப்பிங் மை பேக்' கண்காட்சியில் நடைபெற உள்ளது. 



இது குறித்து கிளாசிக் போலோ ஆடையகத்தை கோவை மாவட்டத்தில் தனி உரிமை எடுத்திருக்கும் ரதிஸ் குமார் கூறியதாவது:-

நாங்கள் அறிமுகப்படுத்த உள்ள பயோ க்ரேடபில் துணிப்பைகள் பிளாஸ்டிக் கலப்படம் இன்றி முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த பைகளை 'ட்ரு க்ரீன்' என்ற நிறுவனம் எங்களுக்கு தயாரித்து வழங்குகிறது. 

சோளம், உணவுபொருட்கள் மற்றும் நார் பொருட்களின் பாக்டீரியாக்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பைகள் சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காது.

மேலும், இந்த க்ரீன் பேக் குறைந்தபட்சம் சில நாட்களுக்கு பிறகு தானாக மக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) இந்த புதிய துணிப்பையை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன்  முன்னிலையில் வெளியிட இருக்கிறோம்.

கோவை மாவட்டத்தில் இது போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் முதல் க்ரீன் பேக் எங்களுடையது என்பதில் பெருமையடைகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...